#SAVESUJITH தோண்டப்பட்ட குழிக்குள் 'இறங்கிய' தீயணைப்பு வீரர்.. துளையிடும் 'பணிகள்' மும்முரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 28, 2019 01:54 PM
குழந்தை சுஜித்தை காப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் நிலைமையை ஆய்வு செய்வதற்காக இறங்கியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுப்பட்டி கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 65 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாறைகள் அதிகமாக இருந்ததால் குழி தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்தநிலையில் தற்போது வரை சுமார் 45 அடி நீளத்திற்கு குழி தோண்டப்பட்டு உள்ளது. தோண்டப்பட்ட குழியை ஆய்வு செய்வதற்காக தீயணைப்பு வீரர் ஒருவர் குழிக்குள் இறங்கி மார்க் செய்துவிட்டு வெளியே வந்தார். இதையடுத்து பாறைகளை உடைக்க போர்வெல் மூலம் துளையிடப்பட்டு வருகிறது.
Tags : #SAVESURJITH
