"வலிமையான பெண்ணுக்கு".. ஆந்திர CM ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவியின் பிறந்தநாள்.. நடிகை ரோஜாவின் எமோஷனல் போஸ்ட்..
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகையும் ஆந்திர மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரோஜா, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

Also Read | வாயிலேயே விழுந்த பந்து.. பறிபோன 4 பற்கள்.. இலங்கை வீரருக்கு கிரவுண்ட்ல நடந்த சோகம்.. வீடியோ..!
தமிழில் செம்பருத்தி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்த ரோஜா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார் நடிகை ரோஜா. 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ரோஜா.
ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்றதும் நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தனது ஆட்சியில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறி இருந்தார். அதன்படி அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது, நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவர் தற்போது, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறையின் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவி ஒய்.எஸ் பாரதி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ரோஜா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,"ஒரு வலிமையான பெண் தன்னிடம் பயணத்திற்கு போதுமான பலம் உள்ளது என்பதை நன்கு அறிவார். ஆனால் வலிமை கொண்ட பெண் அந்த பயணமே தன்னை வலிமையானவராக மாற்றும் என அறிந்திருப்பார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் YS. பாரதி அவர்களே" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவி இருக்கும் புகைப்படத்தையும் ரோஜா பகிர்ந்திருக்கிறார்.
இந்த பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் YS.பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
Also Read | "ஹலோ MLA".. தேர்தலில் வெற்றிபெற்ற மனைவி.. ரவீந்திர ஜடேஜா போட்ட நெகிழ்ச்சியான போஸ்ட்..!

மற்ற செய்திகள்
