‘ட்விட்டரை 6 மாசமா யூஸ் பண்ணலயா?’... ‘செக் வைக்கும் ட்விட்டர் நிறுவனம்’... விபரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Nov 27, 2019 05:47 PM

ட்விட்டர் தளத்தில் கூடுதல் வசதிகள் செய்யும் பொருட்டு, முதல் முறையாக புதிய முயற்சியை ட்விட்டர் நிறுவனம் கையாள உள்ளது.

Twitter will remove inactive accounts and free up usernames

பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜி மெயில், யாஹூ போன்ற மின்னஞ்சல் கணக்குகளை அந்நிறுவனங்களே நீக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. தற்போது இந்த வழக்கத்தை ட்விட்டர் நிறுவனமும் முதன்முறையாக கையில் எடுத்துள்ளது. அதாவது, 6 மாதங்களுக்கும் மேலாக, பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை நீக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 11-ம் தேதிக்குள் தங்களது ட்விட்டர் கணக்கை ஆக்டிவேட் செய்யாத பயனாளர்களின் கணக்குகள் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் பயனாளரின் மெயில் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, அதன் பின்னர்தான் அக்கெவுண்ட்களை நீக்கும் பணிகள் தொடங்கும் என்றும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. பயனாளர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்காகவே பயன்படுத்தாமல் உள்ள கணக்குகளை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக புதிய கொள்கை வரைவுகளையும் ட்விட்டர் தயாரித்துள்ளது என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயன்பாட்டில் இல்லாத யூஸர்நேம்களை, தங்களுக்கு வழங்க வேண்டுமென சில பயனர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்தே, ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறியுள்ளது. இதன்மூலம், ஏராளமான யூசர்நேம்கள் திரும்பப்பெற்று தேவைப்படுவோர்களுக்கு அதை வழங்கலாம் என கருதுகிறது.

Tags : #TWITTER #ACCOUNTS #HOLDERS #DELETE