'பத்து வருசமா அனுபவிச்ச வேதனை...' பட்ட கஷ்டத்துக்கெல்லாம் 'ஆதார் கார்டு'னால ஒரு விடிவு பிறந்துருக்கு...! நடந்தது என்ன...? - நெகிழ வைத்த சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் ஆதார் கார்டு உதவியுடன் 10 வருடங்களுக்கு பின் தன் குடும்பத்துடன் இணைத்துள்ளார் மனநலம் பாதித்த இளைஞர் ஒருவர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 8 வயது சிறுவன் ஒருவன் பெற்றோரை காணாமல் தவித்துள்ளான்.
அந்த சிறுவனை மீட்ட போலீசார் சமர்த் தாம்லேவிடம் ஒப்படைத்தனர். அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெயர் தெரியாத சிறுவனுக்கு அமன் என பெயரிட்டுள்ளனர்.
தற்போது அமனுக்கு 18 வயது ஆன நிலையில் ஆதார் எடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது பயோமெட்ரிக் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து விசாரித்தில் அமனுக்கு ஏற்கனவே ஆதார் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதோடு அவரின் பயோமெட்ரிக் பொருந்திய ஆதார் கார்டில் அமனின் பெயர் முகமது ஆமீர் என்பதும், பெற்றோர் மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் ஓட்டல் நடத்தி வருவதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அமனின் பெற்றோரை தொடர்புக் கொண்டு சுமார் 10 வருடங்களுக்கு பிறகு, சிறுவன் முகமது ஆமீரை அவனது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.
ஆதார் கார்டு உதவியுடன் பல ஆண்டுகளுக்கு பின் சிறுவன் பெற்றோரிடம் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
