"யாருன்னே தெரியாது... அடிக்கடி 'கால்' பண்ணி தொந்தரவு பண்ணான்.." ஒரு நாள் 'திடீர்'னு வந்த வீடியோ 'கால்',,, ATTEND செய்த பெண்ணிற்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த நபர், போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், போலீசில் புகாரளித்த நபரின் மனைவிக்கு அடிக்கடி மொபைல் போனில் அழைத்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு வீடியோ கால் செய்த அந்த நபர், அவரின் பிறப்புறுப்பை புகாரளித்த நபரின் மனைவியிடம் காண்பித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், தனது கணவரிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். முன்னதாக, அந்த நபர் பெண்ணிற்கு ஒன்று இரண்டு முறை அழைத்து தொந்தரவு செய்து வந்த நிலையில், தொடர்ந்து அடிக்கடி அழைத்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அது மட்டுமில்லாமல், அந்த பெண்ணிடம் தவறான செயலில் ஈடுபடவும் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக, தனது மனைவியை அடிக்கடி தொந்தரவு செய்யும் நபர் மீது புகாரளித்து அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளார். இப்படி, கீழ்த்தரமான முறையில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வரும் அந்த நபரை போலீசார் தொலைபேசி எண் சிக்னல் உள்ள பகுதியை வைத்துத் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
