“மொத்தமா 45 குடும்பம், 5 மாடி 'கட்டிடம்... சர சரவென நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த சோகம்...” அயராது தொடரும் மீட்புப் 'பணி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் மக்கட் தாலுகாவின் கஜல்புரா என்னும் பகுதியில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடம் ஒன்றில் சுமார் 45 குடும்பங்கள் வரை வசித்து வந்ததாக தெரிகிறது. நேற்று திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளில் அங்கு வசித்து வந்த ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தேசிய பேரிடம் மீட்புக் குழுவினர், போலீசார், தீயணைப்புப் படையினர் அங்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த சுமார் 20 பேரை மீட்டுள்ளனர். படுகாயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து, அந்த கட்டிட இடிபாடுகளில் 19 பேர் வரை இன்னும் சிக்கியுள்ளதாகவும், இந்த கட்டிட விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிகவும் தீவிரமாக, தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மற்ற செய்திகள்
