2 ஃபேன், பல்பு இருக்குற குடிசை வீட்டுக்கு ‘கரெண்ட் பில்’ இவ்ளோவா.. ஷாக் ஆன பெயிண்டர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டு மின்விசிறி, பல்பு மட்டுமே உள்ள குடிசை வீடு ஒன்றுக்கு 6 மாதத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணமாக ரூ.2.5 லட்சம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | அப்பாவுடன் லிட்டில் பிரின்சஸ் அடிக்கும் லூட்டி..ஒளிஞ்சிருந்து மனைவி எடுத்த கியூட் வீடியோ..
அரியானா மாநிலம் ஃபதேஹாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் அப்பகுதியில் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். தினமும் 300 ரூபாய் சம்பாதித்து குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்த சூழலில் இவரது வீட்டுக்கு 6 மாதத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணமாக ரூ.2.5 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து பிரேம் குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பிரேம் குமாரின் குடும்பத்தினர் 2 மின்விசிறிகள் மற்றும் 2 பல்புகள் மட்டுமே கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுதொடர்பாக உள்ளூர் மின்சார அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் மின்கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனை அடுத்து முதல்வர் சாளரத்தில், குறை தீர்க்கும் அமைப்பில் புகார் அளித்துள்ளார். மேலும், மின் கட்டணத்தை சரி செய்ய மின்சாரத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரேம் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சவுதலாவை அணுக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய மின்துறை துணை கோட்ட அலுவலர், ‘வீட்டின் மின் நுகர்வை ஒப்பிடும்போது மின் கட்டணம் அதிகமாக உள்ளது. மின் கட்டணம் அதிகமானதற்கான காரணத்தை கண்டறிய முயற்சி செய்து வருகிறோம். இந்த மின் கட்டணம், மின் மீட்டரில் உள்ள அளவின்படி விதிக்கப்பட்டுள்ளது. மின் மீட்டரை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பிறகு சரியான மின் கட்டண பில் கொடுக்கப்படும்’ என அவர் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
