அப்பாவுடன் லிட்டில் பிரின்சஸ் அடிக்கும் லூட்டி..ஒளிஞ்சிருந்து மனைவி எடுத்த கியூட் வீடியோ..
முகப்பு > செய்திகள் > உலகம்வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் தனது தந்தையுடன் சுட்டிப்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "தாஜ்மஹாலின் 22 மர்ம அறைகளை திறக்கணும்" மனுவை விசாரித்த நீதிபதிகள் கேட்ட சரமாரி கேள்விகள்.. என்ன ஆச்சு?
பெண் குழந்தை
வீட்டில் பெண் குழந்தைகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் அவர்கள் அப்பா செல்லமாகவே இருப்பது உண்டு. அதே நேரத்தில் தாங்கள் கத்துகிட்ட மொத்த சேட்டைகளையும் இந்த லிட்டில் பிரின்சஸ்கள் இறக்கிவைக்கும் இடம் அப்பாக்கள் தான். இதன் காரணமாகவே, இணையதளங்களில் தந்தையுடன் லூட்டி அடிக்கும் குழந்தைகளின் வீடியோ பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோவில் சுட்டிக் குழந்தை ஒன்று தனது தந்தையின் தோள்களில் அமர்ந்தபடி நடனம் ஆடுகிறது.
வைரல் வீடியோ
அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபனி லூயிஸ். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். வேலைக்குச் செல்லும் லூயிஸ், வழக்கமாக இரவில் வீடு திரும்புவது வழக்கம். அப்படி சமீபத்தில், தனது காரில் பணிக்குச் சென்றிருக்கிறார் லூயிஸ். அன்றைய தினம் வீட்டிற்கு திரும்பிய அவர், வீட்டின் மேற்பகுதியில் உள்ள ஜன்னலின் வழியே தனது கணவரும் குழந்தையும் நிற்பதை பார்த்திருக்கிறார்.
குழந்தை தனது தந்தையை இறுக கட்டிக்கொள்ள, அவர் பாசத்துடன் முத்தம் கொடுப்பதை லூயிஸ் காரில் இருந்தபடியே வீடியோவாக எடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தந்தையும் மகளும் நடனமாடியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவில் லூயிஸ்,"இந்த காட்சியை கண்ட பின்னர் நான் எனது காரை நிறுத்திவிட்டேன். எனது கண்கள் கலங்கிவிட்டன" என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வீடியோவை லூயிஸ் சமூக வலை தளங்களில் பகிர, தற்போது அது வைரலாகி வருகிறது. தனது தந்தையுடன் நடனமாடும் சுட்டிக் குழந்தையின் வீடியோவிற்கு நெட்டிசன்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை இதுவரையில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். தற்போது இந்த கியூட் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
