'ப்ரோ... இது உங்களுக்கு எத்தனாவது மேட்ச்'?.. 'FIRST MATCH'!!.. 'என்னங்க சொல்றீங்க?.. இது RECORD-ங்க'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் அறிமுக வீரரான பிரசித் கிருஷ்ணா முதல் போட்டியிலேயே பிரம்மிக்கவைக்கும் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா முதல் 3 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து சொதப்பி வந்தார். குறிப்பாக மூன்றாவது ஓவரில் மட்டும் 22 ரன்களை வாரி கொடுத்தார்.
இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் இவரை ஏன் அணியில் எடுத்தீர்கள் என்று விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஆனால், தனது நாலாவது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராயின் விக்கெட்டை தூக்கினார்.
இதை அடுத்து தனது ஐந்தாவது ஓவரில் பென் ஸ்டோல்க்ஸின் விக்கெட்டையும் தூக்கினார். ஆரம்பத்தில் சொதப்பலாக பந்துவீசி ரன்களை கொடுத்தாலும் அதற்கடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு உதவியிருந்தார். தொடர்ந்து பந்துவீசி வந்த இவர் சாம் பில்லிங்ஸ் மற்றும் டாம் கரனின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்த போட்டியில், மொத்தம் 8.1 ஓவர்கள் வீசியுள்ள கிருஷ்ணா 54 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால், கிருஷ்ணாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது