'உங்களுக்காக தான் வராங்க'... 'இத மட்டும் பண்ணுவீங்களா 'ப்ளீஸ்'...நெகிழ வைத்த ஜொமோட்டோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jun 06, 2019 12:24 PM
ஜொமோட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை பலரையும் நெகிழ செய்துள்ளது.

தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் என்றால்,கடுமையான வெயிலின் தாக்கம் மறுபக்கம் என,சென்னை மக்கள் அல்லல் பட்டு வருகிறார்கள்.இதனால் பலரும் சாப்பிட கூட வெளியில் செல்லாத நிலையில் தான் இருக்கிறார்கள்.இதனால் தங்களின் உணவு தேவையினை,ஜொமோட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் நிறைவு செய்து வருகிறார்கள்.இதனால் மற்ற நாட்களை விட தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்வது என்பது வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனிடையே ஜொமோட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதில் 'உணவினை டெலிவரி செய்யும் டெலிவரி பாய்கள், தண்ணீர்ப் பிரச்னையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.எனேவ உங்களை தேடி வரும் டெலிவரி பாய்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவுங்கள்.வெயிலின் தாக்கத்தை நாம் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் வெயிலில் இருந்து காத்துக் கொள்ள அவர்களுக்கு நீங்கள் செய்யும் இந்த உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மனிதத்தன்மையுடன் டெலிவரி செய்ய வருபவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து உதவுங்கள்' என டெலிவரி பாய்களுக்காக,ஜொமோட்டோ நிறுவனம் குரல் கொடுத்துள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது.
Humans may be 70% water, but can definitely be 100% nice 😇 pic.twitter.com/GiFxq4zLBr
— Zomato India (@ZomatoIN) June 4, 2019
