"ஒரு வருஷமா ஒண்ணா இருந்துட்டோம்.. இனி நீ தப்பிக்க வழியே இல்ல".. திருமணத்தை மீறிய உறவில் காதலனை மிரட்டிய காதலி .. கோபத்துல காதலன் போட்ட பிளான்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் மர்மமான முறையில் பெண் ஒருவர் மரணமடைந்த வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி, மோகன் கார்டன் காவல்நிலையத்திற்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது. அதில், லால் ஃபார்ம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே, உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இதுகுறித்து விசாரணையில் இறங்கினர் காவல்துறையினர்.
விசாரணை
மரணமடைந்த பெண்ணின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ய துவங்கிய போலீசார், அப்பகுதி முழுவதும் பொதுமக்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். அப்போது, உயிரிழந்த பெண் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வந்ததும் போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது.
இதைனையடுத்து, உத்திர பிரதேசம் மற்றும் டெல்லியில் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டனர். இதன் பலனாக உத்திர பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொய் வழக்கு
கைது செய்யப்பட்ட விஜய்யும் மரணமடைந்த பெண்ணும் கடந்த ஒரு வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இடையில், தனக்கு பணம் வேண்டும் எனவும் கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கு கொடுத்துவிடுவேன் என அந்தப் பெண் விஜயை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் அந்தப் பெண்ணை பழிவாங்க நினைத்திருக்கிறார். இந்நிலையில், டெல்லியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அந்த பெண் செல்வதை அறிந்த விஜய் தானும் டெல்லிக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார்.
டெல்லியில், அந்த பெண்ணை போன் மூலமாக தொடர்புகொண்டு பேசிய விஜய், பின்னர் அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது பெண்ணை கொலை செய்த விஜய், அங்கிருந்த மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை தூக்கிச் சென்றுள்ளார். இந்நிலையில், விஜயை சுற்றிவளைத்த காவல்துறையினர் அவரிடமிருந்து பெண்ணின் உடமைகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகாக தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை, இளைஞர் கொலை செய்த சம்பவம் டெல்லி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.