குரங்கு அம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு சொன்ன ஆறுதலான விஷயம்..ஆனா அப்படி ஒரு பிரச்சனையும் இருக்காம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jun 27, 2022 07:14 PM

உலக அளவில் குரங்கு அம்மை பாதிப்பு சுகாதார அவசர நிலையை எட்டவில்லை என உலக சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது.

WHO says monkeypox not currently a global health emergency

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இருப்பினும் இதில் காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தான் மிகுந்த ஆபத்தானதாக கருதப்பட்டது.

இந்நிலையில், ஆப்பிரிக்காவை தாண்டி ஐரோப்பியாவிலும் பரவ துவங்கியுள்ளது இந்த குரங்கு அம்மை. தற்போது வரை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 50 நாடுகளில் 3,200 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள்

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நிலையில், நேற்று உலக சுகாதார ஆணையம் குரங்கு அம்மை தொடர்பான அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய உலக சுகாதார அமைப்பின் டெட்ரோஸ் அதானோம், " WHO வெளியிடக்கூடிய அதிகபட்ச எச்சரிக்கை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக தான் இருக்கும். ஆனால், குரங்கு அம்மை உலகளாவிய சுகாதார அவசரநிலையை எட்டவில்லை. இருப்பினும் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக திகழ்கிறது" எனத் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த நடவடிக்கை

உலகளவில் குரங்கு அம்மையை கட்டுப்படுத்துவது குறித்து பேசிய டெட்ரோஸ்," குரங்கு அம்மை பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை கிடைப்பதற்கும் உலகளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது" என்றார்.

Tags : #MONKEYPOX #WHO #HEALTH #குரங்குஅம்மை #உலக சுகாதார ஆணையம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. WHO says monkeypox not currently a global health emergency | World News.