உங்க QUALIFICATION என்ன?... ஆனந்த் மஹிந்திராவிடம் கேள்விகேட்ட நபர்.. மனுஷன் சொன்ன பதில் தான் வெயிட்டு.. அல்டிமேட் சார் நீங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது qualification பற்றி கேள்வி கேட்ட நபருக்கு அளித்த பதில் ட்வீட்டரில் வைரலாக பரவி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
வைரல் ட்வீட்
அபிஷேக் தூபே என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிறுமி ஒருவர் வனப் பகுதியில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,"இன்று நான் ஹிமாச்சலின் ஸ்டௌன் பகுதியில் பயணம் மேற்கொண்டேன். இந்த சிறுமி தனியாக அமர்ந்து பாடத்தினை எழுதுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். புத்தகங்களின் மீது அவள் கொண்டிருந்த ஈடுபாட்டைக் கண்டு நான் பெரிதும் வியப்படைந்தேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
Beautiful photograph, Abhishek.
She is my #MondayMotivation https://t.co/NMViCvaAwO
— anand mahindra (@anandmahindra) June 27, 2022
மேலும், ஆனந்த் மஹிந்திராவை இந்த பதிவில் டேக் செய்திருந்தார் தூபே. இந்நிலையில், இப்பதிவை பகிர்ந்துள்ள மஹிந்திரா,"அருமையான புகைப்படம் அபிஷேக். இந்த சிறுமி தான் என்னுடைய திங்கட் கிழமையை உத்வேகம் நிறைந்ததாக மாற்றியிருக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உங்க குவாலிஃபிகேஷன் என்ன?
ஆனந்த மஹிந்திராவின் இந்த பதில் வைரலாக பரவத் துவங்கவே, அதில் வைபவ் என்பவர் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதில்," சார் உங்களுடைய qualification பற்றி நான் தெரிந்துகொள்ளலாமா?" எனக் கேட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா,"வெளிப்படையாக, எனது வயதை பொறுத்தவரையில் எந்தவொரு தகுதிக்கும் ஒரே தகுதி அனுபவம் மட்டுமே" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் பல நெட்டிசன்களால் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
