யார்டா ரெயின்கோட்ட இங்க போட்டு வச்சுருக்கது...? ‘சரி எடுத்து வச்சுப்போம், யூஸ் ஆகும்...’ ‘மப்பில் கொரோனா பாதுகாப்பு கவசத்தை ரெயின்கோட் என நினச்சு சுட்ட நபர்...’ - கடைசியில இப்படி ஆகி போச்சே...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா பாதுகாப்பு கவசத்தை ரெயின்கோட் என்று நினைத்து திருடி சென்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் காய்கறி கடை நடத்தி வரும் ஒருவர் குடிபோதையில் கால்வாயில் விழுந்து காயமடைந்துள்ளார். மேலும் சிகிச்சைக்காக நாக்பூரில் இருக்கும் மாயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பியபோது, அவர் தன்னுடன் யாரோ ரெயின்கோட்டை வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என நம்பி ,பிபிஇ கிட்டையும் கொண்டு சென்றுள்ளார். மேலும் பிபிஇ கிட்டை ரெயின்கோட் என நினைத்து தனது நண்பர்எதுக்கும் ஒருவரிடம் ரூ .1,000 க்கு விற்றுள்ளார்.
பிபிஇ கிட்டை வாங்கிய அவரின் நண்பரிடம் சிலர் இது ரெயின்கோட் அல்ல, பிபிஇ கிட் என்பதை கூறியுள்ளனர். மேலும் நகரின் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார துறை ஊழியர்கள் அந்த நபரிடமிருந்து பாதுகாப்பு உடையை கைப்பற்றி எரித்துள்ளனர். மேலும் விசாரணையில் குடிபோதையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது பிபிஇ கிட் திருடியதாக அதிகாரிகளிடம் கூறினார். அதன்பிறகு, அதிகாரிகள் அவரது மாதிரியை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட அவரது முதன்மை தொடர்புகளை அதிகாரிகள் கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர்.