'சென்னையின் நிலவரம் என்ன'... 'மருத்துவ நிபுணர் கூட்டத்தில் முதல்வர் என்ன சொன்னார்'... வெளியான விரிவான தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனையில் பல தகவல்களை முதல்வர் பகிர்ந்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அது தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய முதல்வர், தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. அரசின் தொடர் நடவடிக்கைக்கு இது நல்ல பலனைக் கொடுத்துள்ளது. மிக முக்கியமாக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் என்பது மிகவும் குறைவு. அதிக அளவு பரிசோதனை கூடங்கள் உள்ளதும் தமிழகத்தில் தான்.
இதற்கிடையே தமிழக அரசின் சார்பாக அனைவருக்கும் இலவச முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவது முக்கியமான முன்னேற்றமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுத் தொற்று குறைக்கப்பட்டது என முதல்வர் தெரிவித்தார்.
இதனிடையே ஒவ்வொரு வீட்டிற்கும் 10-க்கும் மேற்பட்ட முறை நேரில் சென்று காய்ச்சல் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது என்று கூறிய முதல்வர் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்று (30.7.2020) தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஜெனீவா, வேலூர், ஈரோடு, சென்னையிலுள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் எட்டாவது முறையாக காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டேன். pic.twitter.com/ZIJFDeVPLs
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 30, 2020

மற்ற செய்திகள்
