இந்த 'பழக்கம்' இருக்கவங்களுக்கு... கொரோனா பரவுற 'வாய்ப்பு' அதிகம்... மத்திய சுகாதாரத்துறை 'வார்னிங்'
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா கடந்த 8 மாதங்களாக மக்களின் நிம்மதியை பறித்து வீட்டில் உட்கார வைத்து விட்டது. தடுப்பூசி பணிகள் வேகமெடுத்தாலும் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் புழக்கத்துக்கு வரும் என கூறப்படுகிறது. இதனால் சமூக இடைவெளி, தனிமனித சுகாதாரம், ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது.

இந்த நிலையில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வார்னிங் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''புகைப்பழக்கம் உள்ளவர்களின் , கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. புகைப்பிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும்.
அது மட்டுமல்லாமல் புகைப்பிடிப்பவர்களுக்கு புகைப்பழக்கத்தால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக போரிடும் சக்தியை இழந்துவிடும். இதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும் போது அவை மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது,'' என தெரிவித்து உள்ளது.

மற்ற செய்திகள்
