'எல்லாமே பக்கா... விரைவில் நல்ல செய்தி'!.. இந்தியாவுடன் கைக்கோர்க்கும் ரஷ்யா!.. நிறுவனங்கள் கடும் போட்டி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் 5' தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பரிசீலனை நடந்து வருவதாக தேசிய தடுப்பூசி நிபுணர் குழு தலைவர் கூறியுள்ளார்.

ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்வதற்கு அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது தொடா்பாக பரிசீலிக்கப்பட்டு வருதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பான தேசிய நிபுணர் குழுவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினரும், மருத்துவருமான வி.கே.பால் இது தொடர்பாக கூறியதாவது, "ரஷ்யா தயாரித்துள்ள 'ஸ்புட்னிக்-5' தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை மற்றும் உற்பத்தியை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்வதற்கு அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளதற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
அதுதொடா்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அரசுடன் இணைந்து பணிபுரிய சில இந்திய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
மேலும், பல இந்திய நிறுவனங்கள் ரஷிய நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதுதொடா்பாக விரைவில் நல்ல முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளது" என்றார்.

மற்ற செய்திகள்
