'தடுப்பூசிக்கான காத்திருப்பு எல்லாம் முடிஞ்சுது'.... 'இந்த வாரத்துலயே'... 'மக்களுக்கு வெளியான குட் நியூஸ்'... 'தொடர் சர்ச்சைகளுக்கு நடுவே அதிரடி காட்டும் நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் இந்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியான (Coronavirus vaccine) ஸ்பூட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசி சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு பரவலான பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என ரஷ்ய அறிவியல் அகாடமியின் இயக்குனர் டெனிஸ் லோகுனோவ் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கான பரிசோதனை விரைவில் தொடங்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் பெறப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மருத்துவ கண்காணிப்புக் குழுவான ரோஸ் டிராநாட்ஸரின் தர சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், செப்டம்பர் 10 முதல் 13 வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தடுப்பூசியை வழங்க அனுமதி பெற வேண்டும் எனவும் கூறியுள்ள லோகுனோவ், அதன் பின் கொரோனா தடுப்பூசியை நாங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்க இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தடுப்பூசி ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் மேற்பார்வையில் வழங்கப்படும் எனவும், அதிக ஆபத்துள்ள குழுவை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் லோகுனோவ் கூறியுள்ளார். ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி அவசர கதியில் உருவாக்கப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், இந்த தடுப்பூசி சிறந்த பாதுகாப்பு அளிப்பதாக பிரபல மருத்துவ இதழான லான்செட் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
