தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலா? 144 கூட போடுங்க.. மத்திய உள்துறை செயலாளர் பரபர கடிதம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலாக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் மீண்டும் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பண்டிகை காலம் என்பதால் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டம் கூட பல மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புத்தாண்டு காலத்தில் மக்கள் கடற்கரைகளில் கூட தடை உள்ளது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு முக்கியக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதுபோக, தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் தேவைப்படும் சூழலில் 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக இரவு நேர ஊர்டங்கை அமல்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா? பண்டிகை காலங்களில் 144 உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பான ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு கலந்தாலோசித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்தே நேரடி உத்தரவு வந்துள்ளதால் இம்முறை ஒமைக்ரானுக்கு எதிராக நிச்சயம் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.