'ஊரடங்கு நேரத்தில் உலக சாதனை'...'3 மாதத்தில் 350 படிப்புகள்'... அசத்திய கேரள மாணவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஊரடங்கு நாட்களில் 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து உலகச் சாதனைப் படைத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ரகுநாத் மற்றும் கலாதேவி தம்பதியரின் மகள் ஆர்த்தி. இவர் வேதியியல் பாடப்பிரிவில் இராண்டாம் ஆண்டு முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். படிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், எப்போதும் புதிய விஷயங்கள் எதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் அவரிடம் இருக்கும். இந்தச்சூழ்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டதால், அந்த நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க எண்ணிய ஆர்த்தி, தனது கவனத்தை ஆன்லைன் படிப்புகள் மீது செலுத்தினார்.
அதன்படி கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து உலகச் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது ''எனது கல்லூரி ஆசிரியர் ஒருவர்தான் எனக்கு ஆன்லைன் படிப்பு உலகத்தை அறிமுகப்படுத்தினார். அங்கு அதிகமான படிப்புகள் உள்ளன. அவை காலநேரத்திலும், பாடத்திட்டத்திலும் வேறு பட்டுக் காணப்படுகின்றன. எனது கல்லூரி முதல்வர் அஜிம்ஸ் பி முஹம்மது, ஆசிரியர் நீலீமா மற்றும் ஆன்லைன் படிப்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஹனிவ்வா ஆகியோர் எனக்கு உதவிக்கரமாக இருந்தனர்'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே உலக நாடெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் படிப்புகளை நிறைவு தங்களது மகள் நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளது குறித்து பெருமையடைவதாக ஆர்த்தியின் பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.