VIDEO: 'கைய கட்டிட்டு சும்மா நின்னுட்டு இருந்த மனுஷன்...' 'திடீர்னு இப்படி நடக்கும்ன்னு யாருமே நெனைக்கல...' - மிரள வைத்த சிசிடிவி காட்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் முதல் மாடியில் இருந்து மயங்கிய நிலையில் கீழே விழப்போன தொழிலாளியை, அருகில் நின்ற வாலிபர் காப்பாற்றிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள வடகரையில் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. இது அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இந்த வங்கிக்கு வழக்கம்போல வாடிக்கையாளர்கள் வந்து குவிந்திருந்தனர்.
உயரம் குறைவான தடுப்பு சுவருக்கு அருகே தினசரி கூலி தொழிலாளியான பினு என்பவர் வருங்கால வைப்பு நிதியை செலுத்துவதற்காக வடகார கிளையின் முதல் மாடி வராந்தாவில் கைகளை முன்புறம் கட்டியவாறு சாய்ந்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென பினுவுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி கைகள் கட்டப்பட்ட நிலையில் அப்படியே பின்புறமாக வெளியே சரிந்தார். அவர் மாடியில் இருந்து தவறி தலைகீழாக விழும்போது, அருகில் நின்ற பாபுராஜ் என்பவர் விரைந்து செயல்பட்டு பினுவின் கால்களை உடும்பு பிடி போல் பிடித்து கொண்டார்.
விபரீதத்தை உணர்ந்து அவர் சத்தம் போட அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஓடிவந்து பினுவை மேலே தூக்கி காப்பாற்றினர். அப்பகுதியில் ஏராளமான மின்கம்பிகள் இருந்தன.
பினு தவறி கீழே விழுந்திருந்தால் மிகவும் விபரீதம் ஆகியிருக்கும். பினுவை கனகச்சிதமான நேரத்தில் பாபுராஜ் காப்பாற்றிய காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் பாபுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்..