'எந்த அனுபவமும் இல்ல!'.. 'ஒரு பக்கம் மீன் விற்பனை'.. 'இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு!'.. குடும்ப சூழலால் மாணவிகளின் துணிச்சல் முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தங்கையுடன் லாக்டவுன் காலத்தில் தனது படிப்புடன் சேர்த்து மீன் விற்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த மனோஜ் - சிந்து தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மீன் விற்று வாழ்க்கை நடத்தி வரும் இந்த தம்பதியரின் மூத்த மகள் ஷில்பி கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இளைய மகள் நந்தனா பன்னிரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா காரணமாக இருவரும் வீட்டில் இருந்து ஆன்லைனில் கல்வி கற்று வரும் சூழ்நிலையில் மீன் விற்பனையை கவனித்து வந்த மனோஜ் விபத்து ஒன்றில் சிக்கியதால் வியாபாரத்தை தொடர முடியாத நிலை உண்டானது.
இதனால் இவர்களது குடும்பம் போதிய வருமானமின்றி தவித்தது. குடும்பச் சூழலை பார்த்த மனோஜின் மகள்கள் ஷில்பியும் நந்தனாவும் தங்களது தந்தையின் தொழிலை எடுத்து நடத்த திட்டமிட்டனர். எந்தவிதமான அனுபவமும் இல்லை எனும்போதும் கூட தந்தையின் சில நுணுக்கங்களை மட்டும் கேட்டறிந்து கொண்டு அதிகாலை 4 மணிக்கெல்லாம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்த மாணவிகள் சந்தைக்குச் சென்று மீன் வாங்கி 5 மணிக்கெல்லாம் கடை திறந்து விற்பனையை தொடங்கி விடுகின்றனர். அத்துடன் இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பையும் கடையிலேயே உட்கார்ந்து கவனித்து வருகின்றனர். இவர்களை இணையத்தில் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.