"கொரோனால இறந்துட்டாரு... இறுதி சடங்கு முடித்த பிறகுதான்..." - 'பேரதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பம்'... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!!'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் உயிரிழந்தவருடைய உடல் மாற்றி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் சில நாட்களுக்கு முன் கொரோனாவால் உயிரிழந்த விழிஞ்சம் பகுதியை சேர்ந்த நபரின் உடலுக்கு பதிலாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடலை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் அவருடைய குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழிஞ்சம் பகுதியை சேர்ந்த அந்த நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின், அவர்கள் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்து முடித்த பின்னரே, சனிக்கிழமை அன்று உடல் மாற்றிக் கொடுக்கப்பட்டது மருத்துவமனை நிர்வாகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடல் மாற்றிக் கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அந்த இருவருமே கொரோனாவால் உயிரிழந்ததும், அடையாளம் தெரியாத நபர் இறந்தே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதும், பின்னர் அவருக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்
