அறைக்கு வெளியே பூட்டு.. உள்ளே பற்றி எரிந்த தீ.. நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. கேரளாவை அதிர வைத்த முதியவர்
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா : வீடு தீப்பற்றி எரிந்து, நான்கு பேர் உயிரிழந்த சம்பவமும், அதற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது பற்றியும், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது சீனிக்குழி என்னும் இடம். இதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஃபைசல். இவரது மனைவியின் பெயர் ஷீபா. இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஃபைசலின் தந்தையான ஹமீது (79), நள்ளிரவில் தனது மகன், மருமகள் மற்றும் பேத்திகள் ஆகியோர் உறங்கச் சென்ற பிறகு, அறையின் கதவைப் பூட்டி, வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
வீட்டிற்கு தீ
அறைக்குள் தீ பற்றிக் கொண்டு இருப்பதை ஃபைசல் மற்றும் குடும்பத்தினர், பயத்தில் வெளியே ஓட பார்த்துள்ளனர். ஆனால், அறையின் கதவு அடைந்திருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, தன்னுடைய அண்டை வீட்டாருக்கு மொபைல் போனில் அழைத்து, ஃபைசலின் குடும்பத்தினர் விஷயத்தை சொல்லியுள்ளனர்.
வாட்டர் டாங்கும் காலி
ஆனால், அவர் ஃபைசலின் வீட்டிற்கு வருவதற்கு முன்பே, வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதே போல, வீட்டின் வாட்டர் டாங்கும் காலியாக இருந்துள்ளது. தொடர்ந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில், அதற்குள் நான்கு பேரும் தீரியில் கருகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன?
பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹமீது மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மகனின் குடும்பத்தினரை தந்தை ஹமீது இப்படி செய்ததற்கான காரணமும் தெரிய வந்துள்ளது. மகன் ஃபைசலுக்கு வழங்கிய நிலம் தொடர்பாக, தந்தை மற்றும் மகனுக்கு இடையே கடும் தகராறு இருந்து வந்துள்ளது.
நிலத் தகராறு
பைசலுக்கு வழங்கிய நிலத்தை அவர் சரிவர பராமரிக்காமல் வந்ததால், அதனை ஹமீது மீண்டும் கேட்டுள்ளார். ஆனால், இதற்கு பைசல் மறுப்பு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் பெயரில், தனது தந்தை தனக்கு கொலை மிரட்டல் விட்டு வருவதாகவும் ஏற்கனவே புகார் ஒன்றை பைசல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
பெட்ரோல் பாட்டில்கள்
மேலும், அன்றிரவு தீ பற்ற வைப்பதற்கு முன்பாக, பைசல் வீட்டில் கொடுத்த உணவினை, ஹமீது தூக்கி எரிந்து, தகராறில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, நள்ளிரவில் அறையின் வெளியே பூட்டிய ஹமீது, சில பெட்ரோல் பாட்டில்களை அறைக்குள் ஜன்னல் வழியாக தூக்கிப் போட்டு, பின்பு தீ வைத்துள்ளார். தீ பற்ற பற்ற, மேலும் சில பெட்ரோல் பாட்டில்களையும் ஹமீது உள்ளே வீசி எறிந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், அருகில் உள்ளவர்கள் வந்து கைப்பற்றவும் வழி செய்து விடக் கூடாது என்பதற்காக, வாட்டர் டாங்கையும் அவர் காலி செய்து வைத்துள்ளார்.
தப்பிக்க முயற்சி
கடைசியாக அறையின் கழிவறையில் சென்று, தண்ணீர் ஊற்றி தங்களைக் காத்துக் கொள்ள ஃபைசல் மற்றும் குடும்பத்தினர் முயற்சி செய்தும், தண்ணீர் இல்லாத காரணத்தினால் அதற்கு வழி இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.
மகனிடம் இருந்து வந்த நிலத் தகராறின் காரணமாக, மொத்த குடும்பத்தினரையும் தந்தையே தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.