மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடி! இணையத்தை கலக்கும் திருமண புகைப்படம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Mar 19, 2022 11:18 AM

மெல்போர்ன்: மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடிகளின் திருமண புகைப்படம் இணையத்தை கலக்குகிறது. 

Glenn Maxwell Engaged with His Girlfriend Vini Raman

மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை ஒரு வாரம் கொண்ட திருமண நிகழ்வுகளை உள்ளடக்கிய பாரம்பரிய ஐயங்கார் சடங்குகளின் மூலம் திருமணம் செய்து கொள்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி இருவருக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக  திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

Glenn Maxwell Engaged with His Girlfriend Vini Raman

தற்போது மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக காதலர்கள் இருவரும் அறிவித்திருந்தனர். இவர்களது கல்யாண பத்திரிகை மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில்  அச்சடிக்கப்பட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனை பலர் பகிர்ந்திருந்தனர். மேக்ஸ்வெல்லின் இந்து முறை திருமணம் அவரது நெருங்கிய நண்பர்கள் 350 பேர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.

இந்நிலையில் க்ளென் மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் தனது மனைவி வினி ராமனின் புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்துள்ளார், அதில் அவர்கள் தங்கள் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து மோதிரங்களை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர். புகைப்படத்தில், தம்பதியினர் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்தபடி இருவரும் ஒன்றாகப் பயணிப்பது போல் உள்ளனர். 

Glenn Maxwell Engaged with His Girlfriend Vini Raman

"காதல் என்பது நிறைவுக்கான தேடல், உன்னுடன் நான் முழுமையாக உணர்கிறேன்" என்று மேக்ஸ்வெல் கூறியுள்ளார். '18.3.2022' அன்று, மேக்ஸ்வெல் தம்பதியினர் தங்கள் உறவின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த, இதயம், மணமகள் மற்றும் மணமகன் எமோஜிகளையும் பயன்படுத்தி உள்ளனர். வினிராமன் மேக்வெலுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Glenn Maxwell Engaged with His Girlfriend Vini Raman

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஆல் தக்கவைக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது திருமணம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் 2022 இன் ஆரம்ப போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

 

Tags : #CRICKET #IPL #GLEN MAXWELL #VINIRAMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Glenn Maxwell Engaged with His Girlfriend Vini Raman | Sports News.