'இந்தியாவில் கொரோனா 3வது அலை... ஆகஸ்ட் மாதத்தில் தாக்கும்'!.. ஐசிஎம்ஆர் திட்டவட்டம்!.. பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jul 16, 2021 06:56 PM

இந்தியாவை கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அதற்கான காரணங்கள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

india covid third wave to hit august last icmr details

கொரோனா தடுப்பு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு பல்வேறு காரணங்களுக்காக கூட்டம் சேருவது அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, மூன்றாவது அலை என்பது தவிர்க்க இயலாதது என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்திருந்தது.

எனினும், அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, நோய் எதிர்ப்பாற்றலை மீறி பரவக்கூடிய கொரோனா வகை உருவானால், மூன்றாவது அலையின் பாதிப்பு இன்னும் பெரிதாக இருக்கும் என்றும், சில கட்டுப்பாடுகளை நீட்டித்து, அதேசமயம் வைரஸ் உருமாற்றங்கள் மோசமடையவில்லை எனில் பாதிப்பை குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தொற்றுநோயியல் பிரிவு தலைவரான டாக்டர் சமீரன் பண்டா, நாடு தழுவிய அளவில் மூன்றாவது அலை இருக்கக்கூடும் என்றாலும், அதற்காக இரண்டாவது அலை போல தீவிரமானதாகவோ அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கும் என அர்த்தமில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், மாநிலங்கள் முன்கூட்டியே கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்வது, முதல் இரண்டு அலைகளில் பொதுமக்களிடையே ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, நோய் எதிர்ப்பு சக்தியை மீறி பரவக்கூடிய உருமாற்ற வகை உருவாவது, அல்லது மிகவும் வேகமாகப் பரவக்கூடிய உருமாற்ற வகை உருவாவது ஆகிய 4 காரணங்கள், ஆகஸ்ட் இறுதியில் மூன்றாவது அலைக்கு வித்திடலாம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், டெல்டா பிளஸ் மூன்றாவது அலையை ஏற்படுத்துமா எனக் கேட்டபோது, டெல்டா வகையால் தற்போதுள்ளதைவிட மேலும் பெருமளவிலான பொது சுகாதார பாதிப்பு ஏற்படும் என தாம் எதிர்பார்க்கவில்லை என டாக்டர் சமீரன் பண்டா பதிலளித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. India covid third wave to hit august last icmr details | India News.