"அதை மட்டும் சொல்லிட்டா.. என்னை வேலையை விட்டே தூக்கிடுவாங்க".. நெட்டிசன் கேட்ட கேள்வி.. ஆனந்த் மஹிந்திராவின் அல்ட்டிமேட் பதில்.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாடிவிட்டரில் பயனாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அளித்த பதில் பலரையும் புன்னகைக்க வைத்திருக்கிறது.

ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
கேள்வி
இந்நிலையில், இந்திய பணக்காரர்களில் ஒருவரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திராவிடம் டிவிட்டரில் ஒருவர் ஸ்கார்பியோ கார் வெளியிடப்படும் தேதி குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த மஹிந்திரா, அதைக் கூறினால் தன்னை வேலையை விட்டே தூங்கிவிடுவார்கள் என கமெண்ட் செய்திருக்கிறார்.
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய 2022 ஸ்கார்பியோ SUV காரை இந்த வருடம் சந்தைக்கு கொண்டுவர இருக்கிறது. 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், 5 சீட்டுகள், 2179 சிசி டர்போ சார்ஜ் எஞ்சினுடன் வெளிவர இருக்கும் இந்த கார் ஆட்டோமொபைல் பிரியர்களை கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் தான் டிவிட்டரில் ஒருவர்,"எந்த தேதியில் ஸ்கார்பியோ கார் வெளியிடப்படும்? நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்" என ஆனந்த் மஹிந்திராவை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த பதிவுக்கு பதில் அளித்த ஆனந்த் மஹிந்திரா,"உஷ்ஷ்.. அதை கூறினால் என்னை வேலையை விட்டே நீக்கிவிடுவார்கள்" என கமெண்ட் செய்திருக்கிறார்.
ஸ்கார்பியோ கார் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற கேள்விக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அளித்த கமெண்ட் தற்போது டிவிட்டரில் வைரலாக பரவிவருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
