லாஸ்ட் ஓவரில் பொளந்துகட்டிய தோனி.. "நல்லவேளை எங்க கம்பெனிக்கு இப்படி பேர் வச்சிட்டோம்".. தல மஹியை பாராட்டிய ஆனந்த் மஹி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி மேட்சை ஜெயித்துக் கொடுத்த தோனியை இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமான முறையில் பாராட்டியுள்ளார்.

Also Read | விமானத்துக்குள்ள இருந்த எலி.. ஒரு மணி நேரம் Delay-ஆக புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. என்ன நடந்துச்சு..?
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
மாஸ் காட்டிய MSD
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து களம்கண்டது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு இருக்கும் வரவேற்பு போலவே சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கும் எதிர்பார்ப்பு மிக அதிகம். இந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் மேட்ச் யார்பக்கம் என்ற கேள்வியில் மைதானமே அமைதியாக இருந்த நேரத்தில் 'அண்ணன் இருக்கிறேன்' என்ற ரீதியில் உள்ளே வந்தார் தோனி. கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் 6,4,2,4 என வானவேடிக்கை நிகழ்த்தி வெற்றியை சென்னையின் வசமாக்கினார் தோனி. இதனை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தோனியை கொண்டாட, ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமான முறையில் தோனியை பாராட்டியுள்ளார்.
பெயர்
ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில்," மஹி (Mahi) என்பது மஹிந்திராவில் (Mahi-ndra) இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். அட்டகாசமான ஃபினிஷிங் தோனி" எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்திருந்த சென்னை அணி அதே பாணியில் "எங்களுடைய இதயத்தில் ஆனந்தம் (Anand-am) ஏற்பட்டிருக்கிறது" என டிவிட் செய்திருந்தது.
தோனியை வித்தியாசமாக பாராட்டிய ஆனந்த் மஹிந்திராவின் டிவிட் தற்போது வைரலாக பரவிவருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
