கண்ணுபட போகுது.. ஒரே வீட்ல 5 தலைமுறையினர்.. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச க்யூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் பணக்காரர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் சென்சேஷனாக பரவி வருகிறது.

"இந்தாங்க கோவில் பிரசாதம்".. மர்ம நபர் கொடுத்த பானம்.. பக்தியோடு பருகிய மக்களுக்கு நேர்ந்த சோகம்..
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
5 தலைமுறை
ஆனந்த் மஹிந்திரா தற்போது பகிர்ந்து உள்ள வீடியோவில் ஒரு சிறுவன் தனது தந்தையை அழைக்கிறார். அதன் பிறகு அவர் தனது தந்தையை அழைக்க இன்னொருவர் வீடியோவிற்குள் வருகிறார். இப்படி 5 தலைமுறையை சேர்ந்த 'தந்தையர்கள்' ஒரே பிரேமில் தோன்றுகின்றனர். இது சமூக வலை தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
வைரல் வீடியோ
தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா,"என்ன ஒரு வரம். 5 தலைமுறையினர் ஒன்றாக வசிக்கிறார்கள். இந்த உலகில் எத்தனை குடும்பத்தினர் இது போல் 5 தலைமுறையாக தந்தை வழியிலோ தாய் வழியோ வசித்து வருகிறார்கள். இது அரிதான விஷயம். இந்தியாவிலும் இதுபோன்று நடந்தால் நன்றாக இருக்கும்" எனக் குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்து உள்ளார்.
இதனை அடுத்து ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டிற்கு பலரும் கமெண்ட் மற்றும் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், சிலர் தங்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 9 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரையில் 5.4 லட்சம் மக்கள் பார்த்துள்ளனர். இருப்பினும் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
What a blessing. 5 generations together. I wonder how many families around the world have this rare privilege of 5 generations—mothers or fathers—together. Would be great to see a similar video from India… pic.twitter.com/JZhdMQ7HVP
— anand mahindra (@anandmahindra) April 9, 2022

மற்ற செய்திகள்
