"WORLD-CLASS பஸ் ஸ்டாப் இது".. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச வீடியோ.. பேருந்து நிறுத்தத்தில் இவ்வளவு வசதிகளா? வாயை பிளந்த நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Also Read | "மனிதநேயத்துக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்".. பிரதமர் மோடி பாராட்டிய பாகிஸ்தான் பெண்..யார் இவர்?
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
புதிய திட்டம்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்களை தூய்மையாக வைத்திருக்கவும் புதுப்பிக்கவும் புதிய முயற்சிகளை எடுத்துவருகிறார் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரான ஆதித்ய தாக்ரே. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக மும்பையில் உள்ள 105 பேருந்து நிறுத்தங்களில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சிறப்பம்சம்
இந்த புதிய பேருந்து நிறுத்தங்களில் மக்கள் உடற்பயிற்சி செய்யும் வகையில் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிறுத்த கட்டிடத்தின் மீது அழகான செடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பேருந்து நிலையங்களை உபயோகிப்போர் இந்த புதிய வசதிகள் நன்றாக இருப்பதாகவும் பார்க்க அழகாக காட்சியளிப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா இந்த பேருந்து நிலையம் குறித்த வீடியோ ஒன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
உலகத் தரத்திலான பேருந்து நிறுத்தம்
இந்த வீடியோ பதிவில் ஆனந்த் மஹிந்திரா,"இறுதியாக மும்பையில் உலக தரத்திலான பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. கண்களுக்கு அயர்ச்சி அளிக்கும் பேருந்து நிறுத்தங்களுக்கு மத்தியில் உடற்பயிற்சி கம்பிகள், கிரீன் டாப் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட இந்த பேருந்து நிறுத்தங்களை பார்க்க அருமையாக உள்ளது" எனப் பாராட்டியுள்ளார்.
Finally, Mumbai will get world-class Bus stops to replace the eyesores that have been blots on the landscape. Terrific to also see innovative features like the exercise bar & the ‘cool’ green tops. Bravo @AUThackeray @IqbalSinghChah2 pic.twitter.com/VkqRcirdNJ
— anand mahindra (@anandmahindra) April 16, 2022
மேலும், மஹாராஷ்டிரா மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்ரே மற்றும் கிரேட்டர் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் ஆகியோரையும் குறிப்பிட்டு மஹிந்திரா பாராட்டியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த இந்த வீடியோவை 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் லைக் செய்துள்ளனர்.