இந்த டீ விலைமதிப்பு இல்லாதது.. ஆனந்த் மகிந்திரா போட்ட ட்வீட்.. ஃபேமஸ் ஆன இந்தியாவின் கடைசி கடை
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் கடைசி கடை என்ற பெருமை பெற்ற தேநீர் கடை குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியை ஒட்டிய தேநீர் கடை ஒன்று அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சந்தர் சிங் பத்வால் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த தேநீர் கடையானது இந்திய - சீன எல்லையில் இருந்து 24 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
சுமார் 3200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கடையில் சுடச்சுட பரிமாறப்படும் மேஜியும், டீயும் செம்ம பிரபலம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலரும் இதனை வாங்கி சுவைத்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்க்ரீடபிள் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தேநீர் கடையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதற்கு கமெண்ட் செய்துள்ள ஆனந்த் மஹிந்திரா, இந்தியாவில் சிறந்த செல்ஃபி எடுப்பதற்கான இடங்களில் இதுவும் ஒன்று இல்லையா?, இந்த வாசம் பொருத்தமானதாக இருக்காது. இது விலைமதிப்பற்ற ஒரு கோப்பை டீயை குடிக்க ஏற்ற இடம் என பதிவு போட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு பலரையும் இந்தியாவின் கடைசி தேநீர் கடையை உற்றுநோக்க வைத்துள்ளது.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் செம்ம ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். சாமானிய மற்றும் எளிமையான மனிதர்களிடம் காணப்படும் திறமைகளை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிடுவதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். டெல்லியில் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் முழுமையாக இல்லாத நிலையிலும் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை லாவகமாக ஓட்டிய பிர்ஜு ராம் என்பவரது வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்த நபரின் திறமையை பார்த்து நான் வியக்கிறேன். இவருக்கு எனது நிறுவனத்தில் லாஜிஸ்டிக்கில் பிஸினஸ் அசோஸியேட்டாக பணி கொடுக்க விரும்புகிறேன் என பதிவிட்டிருந்தார்.
இந்தியாவில் மூலை முடுக்கு எல்லாம் மறைந்து கிடக்கும் திறமையாளர்களை பாராட்டி வரும் ஆனந்த் மஹிந்திராவால் இன்று இந்தியாவின் கடைசி தேநீர் கடையும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.