'இப்படிப்பட்ட ப்ளேயர வச்சுகிட்டா பஞ்சாப் கிங்ஸ் திணறிட்டு இருக்கு'!?.. ஏன் இவருக்கு வாய்ப்பு கொடுக்கல?.. சரமாரி கேள்வி!.. கோச் 'கும்ப்ளே' விளக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் -ல் தொடர்ந்து திணறிவந்த பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் திடீரென களமிறக்கிய இளம் ஸ்பின்னரின் உதவியால் வெற்றி பெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 131/6 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 132/1 ரன்கள் எடுத்தது. இந்த ஐபிஎல் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி கண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணியை வெற்றி கொண்டது.
இந்த போட்டியில் மும்பை அணியின் ஸ்கோருக்கு இளம் வீரர் ரவி பிஷ்னோய் முக்கிய காரணம் ஆவார். 4 ஓவர்களை வீசிய அவர், 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மும்பை அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோரின் விக்கெட்களை எடுத்தார்.
கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான ரவி பிஷ்னோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். 14 போட்டிகளில் 12 விக்கெட்களை எடுத்துள்ளார். ஆனால், இந்த சீசனிலும் அவர் முதல் 4 போட்டிகளிலும் களமிறக்கப்படவில்லை. 5வது போட்டியில் களமிறக்கப்பட்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரியளவில் உதவி செய்துள்ளார்.
இந்நிலையில், இத்தனை நாள் ஏன் இவரை அணியில் எடுக்கவில்லை என்று ரசிகர்களிடம் எழுந்த கேள்விக்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரவி பிஷோனி கடந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் ஆடினார். ஆனால், இந்த சீசனில் அவர் கடந்த சீசனை போன்று செயல்படுவார் என முதலில் எனக்கு தோன்றுவில்லை. ஏனெனில், பயிற்சி ஆட்டங்களிலேயே அவர் லெக் சைட்களில் சிறப்பாக பந்துவீசவில்லை. அதனால் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதால் முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை.
ஆனால், கடந்த வாரம் முழுவதும் அவரின் ஈடுபாடு மற்றும் ஆட்டம் சிறப்பாக இருந்தது. எனவே, தற்போது அவர் கம்பேக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் சிறந்த போராளி. முக்கியமான போட்டிகளில் இரண்டு விக்கெட்கள் எடுப்பது என்பது பாராட்டக்குறியது என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
மும்பை அணி நிர்ணயித்த 131 என்ற இலக்கை கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி எட்டியது. கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 60 ரன்களும், கெயில் 35 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். இதனால் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மற்ற செய்திகள்
