வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம்.. கிரிமினல் குற்றமா? டெல்லி அரசு பரபரப்பு வாதம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 08, 2022 10:59 AM

புது டில்லி: மனைவியுடன் வற்புறுத்தி உடலுறவில் ஈடுபடுவதை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Forcing marital relationship considered a criminal offense

இந்தியாவில் திருமண அமைப்பில் பல சீர்திருந்தங்கள் கொண்டு வர வேண்டியுள்ளது. இந்திய திருமண அமைப்பில் பெண்களின் தரப்பு குறித்து பெரிதாக யோசிப்பதில்லை. இங்கு அனைத்து முடிவுகளும் ஆண்களே தீர்மானிக்கின்றனர்.

விவாகரத்துகள் அதிகரிப்பு:

இது குடும்ப அமைப்பின் அனைத்து தளங்களிலும் பெண்களின் விருப்பம் என்ன என்பது கேட்கப்படுவதில்லை. அதிலும் பெண்களிடம் அவர்களுக்கான விருப்பத்தை பொருட்படுத்தாமல் தாம்பத்யம் நடப்பது முக்கிய விவாதமாக ஆகியுள்ளது. இது குடும்ப வன்முறையாக கருதப்பட்டு விவாகரத்து செய்யும் அளவிற்கு போவதும் உண்டு.

Forcing marital relationship considered a criminal offense

வழக்கு விசாரணை:

இந்த நிலையில், இந்திய கற்பழிப்பு சட்டத்தில் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்துள்ளது.

Forcing marital relationship considered a criminal offense

பாலியல் வன்முறை:

அப்போது, பெண் சார்பில் வாதிட்ட வக்கீல், வலுக்கட்டாயமாக மனைவியுடனான தாம்பத்யம் நமது வீடுகளில் நடக்கும் மிகப்பெரிய பாலியல் வன்முறை. திருமணம் என்ற கட்டமைப்பில் எத்தனை முறை பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. அவற்றில் எத்தனை பதிவு செய்யப்படுகிறது.  இந்த தகவல்கள் ஒருபோதும் பதிவு செய்வதும் இல்லை, ஆராய்ந்ததும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Forcing marital relationship considered a criminal offense

கொடுமையான குற்றம்:

இந்த நிலையில், டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, திருமணம் ஆனதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம் கொள்வது இந்தியாவில் நடக்கும் கொடுமையான குற்றம் ஆகும். திருமணமான பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் ஒவ்வொரு சட்டத்திலும் வித்தியாசமாக கருத்தப்படுகின்றனர்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கிலும், தொடர்ச்சியாக வற்புறுத்தி சொந்த மனைவியுடன் தாம்பத்யத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை வருகிற ஜனவரி 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளார்.

Tags : #MARITAL RELATIONSHIP #CRIMINAL #FORCE #குற்றம் #வலுகட்டாயமாக

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Forcing marital relationship considered a criminal offense | India News.