“காவல்துறையினரை கத்தியால் தாக்க முயன்றதால்..." என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 02, 2019 01:35 PM

சேலம் மாவட்டம் காரிபட்டியில் பிரபல ரவுடி கதிர்வேல் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Rowdy encountered by police in Salem

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கதிர்வேல் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று சேலம் அருகே காரிபட்டியில் கதிர்வேலை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர் தன்னுடைய கத்தியால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதில் சில போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில், ரவுடி கதிர்வேலை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது கதிர்வேலை பிடிக்க முயன்றோம் ஆனால் அவர் எங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றார் இதில் சில காவலர்கள் காயமடைந்ததால் அவரை என்கவுண்டர் செய்ய வேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சேலத்தில் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று பிரபல ரவுடி கதிர்வேல் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

Tags : #ENCOUNTER #SALEM ROWDY #KILLED