'என் ஆட்டுக்கு 1.5 கோடி கொடுத்தா தான் தருவேன்'... 'ஒத்தக்காலில் நின்ற ஓனர்'... '70 லட்சம் வரை வந்த ஏலம்'... இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது ஆட்டினை 1.5 கோடி ரூபாய்க்கு அதன் உரிமையாளர் ஏலம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Goat named Modi gets an offer of Rs 70 lakh Goat named Modi gets an offer of Rs 70 lakh](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/goat-named-modi-gets-an-offer-of-rs-70-lakh.jpg)
கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் அடியோடு முடங்கிப் போனது. இந்த சூழ்நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இறைச்சிக்கான கால்நடை சந்தைகளும் பழைய நிலைமைக்குத் திரும்பியுள்ளன. இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் அட்பாடி சந்தை என்பது கால்நடை விற்பனைக்குப் பெயர் போனது.
இந்த சந்தையில் கால்நடை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், சங்கோலா தாலுகாவைச் சேர்ந்த பாபுராவ் மெட்காரி என்பவர் ஒரு ஆட்டுடன் வந்துள்ளார். மோடி என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆட்டை, 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்துக்கு விட்டுள்ளார். ஆனால், அங்குக் கூடியிருந்தவர்கள் 70 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டுள்ளனர்.
ஆனால் தன்னுடைய ஆடு எப்படியும் 1.5 கோடிக்கு ஏலத்தில் சென்று விடும் என்ற நம்பிக்கையிலிருந்த அவர், 70 லட்ச ரூபாய் ஏல தொகையினை ஒத்துக் கொள்ளவில்லை. இறுதி வரை தனது ஏல தொகையில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் கடைசி வரை அவர் எதிர்பார்த்தது போல நடக்காமல் போக, சோகத்துடன் திரும்பிச் சென்றார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)