'இந்தியா மீது இருந்த பயண தடை நீங்கியது'... 'இந்த நாட்டுக்கு போறவங்க பிளான் பண்ணலாம்'... அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலால் நாடு முழுவதும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்குத் தற்காலிக தடை விதித்தன.
இதற்கிடையே, இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளில் டெல்டா வகை கொரோனா அதிகம் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நாடுகளுடனான விமானச் சேவைக்கு ஜெர்மனி அரசு தற்காலிக தடை விதித்தது. இந்நிலையில், இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளதாக ஜெர்மனி நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் ஜெர்மன் வருபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். நாட்டிற்குள் வரும் முன், கோவிட் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற்றிருக்க வேண்டும். கடந்த வாரம் துபாய் அரசும் இந்தியர்கள் பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
