திடீரென தீ பிடித்து ‘ஃபிரிட்ஜ்’ எரிந்த வழக்கு.. நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஃபிரிட்ஜ் தீ பிடித்து வீடு எரிந்த வழக்கில் நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் வினோத் பி லால். இவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் LG நிறுவனத்தின் ஃபிரிட்ஜ் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி திடீரென ஃபிரிட்ஜ் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்த டிவி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இதுதொடர்பாக ஆலப்புழா மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வினோத் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வினோத்துக்கு இழப்பீடாக 14.30 லட்சம் வழங்க LG நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை பகுதியில் கபீர் என்பவரது வீட்டில் ஃபிரிட்ஜ் திடீரென தீ பிடித்து எரிந்தது.
உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புதுறையினர், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை வேகமாக அகற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.