ஹாய்...! 'லண்டன்ல இருந்து தான் பேசுறேன்...' நாம ஒரு தடவ 'மீட்' பண்ணிருவோமா...? வந்துட்டேன்னு, ஏர்போர்ட்ல இருந்து வந்த போன்கால்...' - பக்காவா பிளான் பண்ணி நடந்த மோசடி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 28, 2021 08:58 PM

திருமண தகவல் மையம் மூலம் லண்டனில் வசிப்பதாக கூறி ரூ. 1.9 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Fraud Marriage Information Center claiming to live in London

மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்மணி ஒருவர், தன்னுடைய வருங்கால கணவரை தேர்வு செய்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, இங்கிலாந்தில் வசிப்பதாக சொல்லிக்கொண்டு ஆதித்யா கணேஷ் என்பவர், அறிமுகமாகி உள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அதற்கு முன்பாக நேரில் சந்தித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர். அதன்படி எங்கு சந்திப்பது என்பதை பேசி கடைசியில் இந்தியாவில் சந்திக்கலாம் என முடிவு செய்தனர்.  இந்த நிலையில் கடந்த ஜூன் 25-ம் தேதி ஆதித்யா கணேஷ், லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரவிருந்தார்.

லண்டன் விமான நிலையத்தில், தான் அதிக எண்ணிக்கையிலான பவுண்டு நாணயங்களை வைத்திருந்ததற்காக, சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி விட்டனர். எனவே வெளியேறாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே உரிய அபராதம் செலுத்தினால்தான் அதிகாரிகள் என்னை விடுவிப்பார்கள் என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

ஆதித்யாவின் பேச்சை உண்மை என்று  நம்பிய அந்த பெண், அவர் கேட்ட தொகையான ரூ.1,90,750 ஐ ஆன்லைன் பரிவர்த்தனையில் அனுப்பி வைத்தார். பணம், ஆதித்யா கணேஷின் கைக்கு வந்து சேர்ந்த அடுத்த நொடியே அவர் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது.  உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி தொடர்புக் கொள்ள முடியாமல் தவித்தார்.

எனவே உடனடியாக, அந்தேரி போலீசில், ஆதித்யா கணேஷ் மீது நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தார். இதனையடுத்து, ஆதித்யா கணேஷ் மீது  இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளில் அந்தேரி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, ஆதித்யா கணேஷின் வங்கிக் கணக்கை முடக்குவதற்கான பரிந்துரையை, சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை அதிகாரிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fraud Marriage Information Center claiming to live in London | India News.