என்ன விட 'டீச்சர்கள்' அதிகமா சம்பாதிக்குறாங்க...! 'தன்னுடைய சம்பளம், அதுல டேக்ஸ் போக மீதி எவ்வளவு...? - விவரங்களை பகிர்ந்த குடியரசு தலைவர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னுடைய மாத சம்பளத்தில் பாதியை வரியாக செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பராங்கு கிராமத்தில் பேசிய உரையில் வரி செலுத்துவதை குறித்து கூறியிருந்தார்.
அந்த உரையில், இப்போதெல்லாம் குடியரசுத் தலைவர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது பற்றி எல்லோரும் பேசுவதை பார்க்க முடிகிறது.
என்னுடைய சம்பளம் குறித்து கூறுவது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. எனக்கு மாதத்திற்கு ரூபாய் 5 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. அதில் ரூ.2.75 லட்சம் வரியாக செலுத்துகிறேன்.
இந்தியாவில் அனைத்து மக்களும் முறையாக வரி செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும். சொல்லப்போனால் அதிகாரிகள், ஆசிரியர்கள் நான் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதித்து சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்' எனக் கூறியுள்ளார்.