பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி.. கடும் பனியால் நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. வாட்சப் மூலமாக டாக்டர் நிகழ்த்திய அற்புதம்.. நிஜமான ஆல் இஸ் வெல் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 13, 2023 11:45 AM

காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனி காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் வாட்சப் மூலமாக பிரசவம் நடைபெற்றிருக்கிறது. தற்போது தாய் மற்றும் சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Doctors assist in childbirth over WhatsApp call in jammu Kashmir

                                 Images are subject to © copyright to their respective owners.

Also Read | எதே... 60 வருஷமா தூங்கலையா?... 80 வயசு தாத்தாவின் விநோத சிக்கல்.. இது எப்படிங்க சாத்தியம்?

இந்த ஆண்டு வட இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்து இருக்கிறது. இதன் காரணமாக அவ்வப்போது பனிச்சரிவும் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் பிரசவ வலியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு வாட்சப் மூலமாகவே பிரசவம் நடைபெற்றிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கெரண் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவ வலியுடன் வந்திருக்கிறார். அப்போது உடனடியாக அவர் குப்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தும் ஸ்தம்பித்து விட்டது. ஹெலிகாப்டர் மூலமாக பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை அதிகாரிகள் முன்மொழிந்த போதிலும் அசாதாரண வானிலை காரணமாக ஹெலிகாப்டர் சேவையும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

Doctors assist in childbirth over WhatsApp call in jammu Kashmir

Images are subject to © copyright to their respective owners.

உடனடியாக இது தொடர்பாக மாவட்ட மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கெரன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர் அர்ஷத் சோஃபி மற்றும் அவரது குழுவினருக்கு வாட்சப் மூலமாக க்ரால்போரா துணை மாவட்ட மருத்துவமனையில் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பர்வைஸ் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

ஏற்கனவே eclampsia எனும் சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்த அந்த கர்ப்பிணிக்கு சோஃபி மற்றும் அவரது குழுவினர் பிரசவம் பார்த்திருக்கின்றனர். இதன் மூலம் குழந்தைப்பேறு நடைபெற்றிருக்கிறது. பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Doctors assist in childbirth over WhatsApp call in jammu Kashmir

Images are subject to © copyright to their respective owners.

நண்பன் படத்தில் வரும் காட்சி போல, மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி காஷ்மீரின் தொலைதூர கிராமத்தில் பெண்மணி ஒருவருக்கு பிரசவம் நடந்திருப்பது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | துருக்கி பூகம்பம்.. இடிபாடுகளில் சிக்கிய இளைஞர்.. உயிரை காப்பாத்திய வாட்சப் ஸ்டேட்டஸ்..!

Tags : #DOCTOR #DOCTORS ASSIST IN CHILDBIRTH #WHATSAPP CALL #JAMMU KASHMIR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Doctors assist in childbirth over WhatsApp call in jammu Kashmir | India News.