'அம்மாவோட ஆசை கள்ளக்காதலனுக்காக...' 'பெத்த மகளையே இணங்க சொன்ன அம்மா...' 'இப்போ வீட்டுக்குள்ள இருந்து எலும்புக்கூடு கெடச்சுருக்கு...' உச்சக்கட்ட கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாயின் தகாத உறவை கண்டறிந்த பெண்ணை, தாயே மகளை கொலை செய்த சம்பவம் 6 வருடங்களுக்கு பிறகு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசிக்கும் சகாய ராணி மற்றும் அப்துல்காசர் என்பவரின் மகள் எஸ்தர் பேபி. கடந்த 2014ஆம் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தன் 4 குழந்தைகளை கூட்டி கொண்டு பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் 6 வருடங்களுக்கு முன் அவர் காணாமல் போனதாக தாய் சகாய ராணி போலீஸில் புகார் அளித்து அந்த வழக்கு தீர்க்கப்படாமல் நேற்று வரை நிலுவையில் இருந்துள்ளது.
தற்போது எஸ்தர் பேபி வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கணவரின் கொடுமையால் அம்மா வீட்டிற்கு வந்த எஸ்தர் பேபி, தன் தாய் சகாய ராணி யாருக்கும் தெரியாமல் பாண்டியராஜன் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சகாய ராணி தொடர்பில் இருந்த பாண்டியராஜனின் ஆசைக்கு தன் மகளையும் இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
எஸ்தர் பேபி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இதனை யாரிடமாவது சொல்ல போகிறாள் என பயந்து, திருப்பூரில் வசிக்கும் தன் சகோதரர் சேவியர் வரவழைத்து, பாண்டியராஜன் மற்றும் சகாய ராணி என மூவரும் இணைந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்தி கொலை செய்து, தான் வசித்து வந்த வீட்டிலேயே புதைத்துள்ளனர். பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக 4 நாட்களுக்கு பிறகு தன் மகளை காணவில்லை என சகாயராணி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவமானது தற்போது திருப்பூரில் இருக்கும் சகாய ராணியின் சகோதரர் சேவியர் மற்றொரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட போது, எஸ்தர் பேபியின் தந்தை அப்துல்காசர் சேவியர் வீட்டிற்கு வந்த பிறகு தான் தன் மகளை காணவில்லை என்றும், அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸில் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசாரிடம் நடந்த எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டுள்ளார் சேவியர். மேலும் எஸ்தர் புதைக்கப்பட்ட இடத்தையும் காட்டியுள்ளார். அதன்படி எஸ்தரின் தாய் சகாயராணி, அவரது கள்ளக்காதலன் பாண்டியராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 6 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட எஸ்தரின் சடலம் மருத்துவர்கள் முன்னிலையில் எலும்புகூடுகளாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பெற்ற தாயே செய்த இந்த கொடூர கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தகாத உறவு எப்பொழுதும் தவறான முடிவுகளையே தரும் என்பதற்கு சகாயராணியின் செயலே எடுத்துக்காட்டாக இருக்கிறது.

மற்ற செய்திகள்
