'இத மட்டும் செய்யலன்னா'... '2024ஆம் ஆண்டு வரை கூட ஆகலாம்'... 'தடுப்பூசி விஷயத்தில்'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள சீரம் சிஇஓ!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க எத்தனை ஆண்டுகள் வரை ஆகலாம் என சீரம் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்தின் சிஇஓ அடால் பூனாவல்லா தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனகா நிறுவன தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனம் பரிசோதித்து வரும் சூழலில், இந்த தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொது பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்தின் சிஇஓ அடால் பூனாவல்லா நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம். உலக அளவில் 15 பில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கண்டறியப்படும் தடுப்பூசி இரண்டு டோஸ்களாக இருந்தால், அனைவருக்கும் இந்த தடுப்பூசிகள் கிடைக்க குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம்.
அதனால் 2024ஆம் ஆண்டு வரை கொரோனா தடுப்பூசிக்கு உலக அளவில் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளது. உலக மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிக்க மருந்து நிறுவனங்கள் இன்னும் தயாராகவில்லை. அத்துடன் நாட்டுக்குள் தடுப்பூசியை விநியோகம் செய்வதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இந்தியாவில் தடுப்பூசி உற்பத்திக்கான திறன் இருக்கும் நிலையில், அதை விநியோகிக்கும் திட்டமிடலை உடனே மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
