'இந்தியாவில் தடுப்பூசி எப்போ வரும்?'.. 'முதலில் யாருக்கு வழங்கப்படலாம்?'.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய இணை அமைச்சர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால் முதலில் கொரோனா தடுப்பூசியை தானே போட்டுக்கொளவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் கிருஷ்ணன் நாயர் , மார்ச் 2021-க்குள் கொரோனா வைரஸுக்கு (Coronavirus) எதிரான தடுப்பூசி தயாராகும் என்று தெரிவித்துள்ளதாக ஹர்ஷா வர்தன் (Union Minister of Health and Family Welfare Harsh Vardhan) கூறியுள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிடட்ட அறிக்கையில், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி (COVID-19 vaccine) வந்துவிடும் என்றும் அதே சமயம் உத்தேசமான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டதுடன், கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால் அதை நிரூபிப்பதற்கான முயற்சியில் இறங்கும் விதமாக, முதல் ‘டோஸ்’ தடுப்பூசியை தானே எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் வயோதிகர்கள் மற்றும் ஆபத்துள்ள அமைப்புகளில் பணிபுரிகிறவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை முதற்கட்டமாக வழங்க ஆலோசித்து வருவதாகவும், இயற்கையான தொற்றுநோயுடன் ஒப்பிடும்போது, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மிக விரைவாக சாத்தியப்படுத்தும் வகையில் இந்த பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Grateful to thousands of you who wrote to me for #SundaySamvaad !
Great to have started a 2-way communication with social media friends. Learning a lot from the conversations.
Hope we can keep up & further strengthen the dialogue👍https://t.co/su977Pnzxk
— Dr Harsh Vardhan (@drharshvardhan) September 13, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் சுவாச அமைப்பு, சிறுநீரக அமைப்பு, இதயம், இரைப்பை மற்றும் குடல் போன்றவற்றின் நிலை தொடர்பான ஆய்வுகளை மருத்துவக்குழு செய்வதாகவும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த தேசிய அளவிலான மருத்துவ பதிவேட்டை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.