'ஒன்னுக்கொன்னு சளைச்சதில்ல... யாரோட தடுப்பு மருந்து டாப்'!?.. கடும் போட்டியில்... 34 தடுப்பு மருந்துகள்... பில்லியன் டாலர் சந்தை யாருக்கு?.. பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 34 வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
உலகிலேயே ரஷ்யாவில் மட்டுமே "ஸ்புட்னிக் வி" என்ற தடுப்பூசியை பெருவாரியான மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் 2 கட்ட சோதனைகளின் போதே தன்னார்வலர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதால், 3-ஆம் கட்ட சோதனைக்கு செல்லும் முன்பே இந்த தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் வழங்கியதற்கு மருத்துவத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் Ad-5-nCoV என்ற தடுப்பூசியை தனியாருடன் இணைந்து ராணுவ மருத்துவ அறிவியல் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இதற்கு காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
Ad-5-nCoV மற்றும் CoronaVac என்ற 2 தடுப்பூசிகளை நாடு முழுவதும் குறைந்தபட்ச அளவில் பயன்படுத்திக்கொள்ள சீனா அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடயே, சீனாவின் இந்த 2 தடுப்பூசிகளும் சவுதி அரேபியா, பாகிஸ்தான், பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. அமெரிக்காவில் அரசின் உதவியுடன் தயாராகிவரும் mRna-1273 தடுப்பூசி, கடந்த ஜூலை 27-ல் 3-ஆம் கட்ட சோதனைக்குள் நுழைந்தது.
அமெரிக்காவின் 89 இடங்களில் mRna-1273 தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுவரும் நிலையில், 10 கோடி டோஸ்களுக்கு, தனியார் நிறுவனத்துடன் அதிபர் டிரம்ப் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
அந்த தனியார் நிறுவனம் mRna-1273 தடுப்பு மருந்திற்கு அங்கீகாரம் கிடைத்த உடன், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 12 கோடி டோஸ்கள் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் AZD 1222 என்ற தடுப்பூசி 2ம் கட்ட சோதனைகளில் சிறப்பான முடிவுகளை கொடுத்த நிலையில், இதற்கு அங்கீகாரம் கிடைத்தபின், புனேவை மையமாக கொண்டு இயங்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா உடன் கைகோர்த்து உலகிலேயே அதிகபட்சமாக 150 கோடி டோஸ்களை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் 3-ஆம் கட்ட சோதனை அண்மையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கோவேக்சின் மனிதர்கள் மீதான சோதனையில் நல்ல பலன்களை கொடுத்துவரும் நிலையில், விலங்குகள் மீதான சோதனையில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வெளிக்கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.