பிரேக் அப் பண்ணும் அளவுக்கு வயதான கப்பிள்ஸ் இடையே வந்த சண்டை.. போலீஸாரின் செயலால் அடுத்த நொடி நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வயதான தம்பதிக்கு அங்கிருந்த அதிகாரிகள் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

சண்டை
உத்திர பிரதேச மாநிலம் கொண்டா நகரத்தை அடுத்த காட்ராபஸார் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை எழுந்ததாக கூறுகிறார்கள் அருகில் வசிப்பவர்கள். இந்நிலையில் நேற்று, 75 வயதான தம்பதி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியிருக்கிறது.
போலீஸ் ஸ்டேஷன்
இதனை அடுத்து அருகில் உள்ள கொண்டா நகர காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள் இருவரும். அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் என்ன புகார் எனக் கேட்க, தம்பதி நடந்தவற்றை கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர். இனிமேல், சண்டை போடக்கூடாது என அறிவுரை வழங்கிய காவல்துறை அதிகாரிகள் இனிப்பு வாங்கிவந்து ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
இனிப்பு
அதன்படி, தாத்தா இனிப்பு எடுத்து பாட்டிக்கு ஊட்டிவிட, பாட்டியும் அவ்வாறே செய்திருக்கிறார். இந்த சம்பவத்தை அதிகாரி ஒருவர் வீடியோவாக எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட அது தற்போது வைரலாக பரவிவருகிறது.
அந்த டிவிட்டர் பதிவில்," தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக காவல் நிலையத்திற்கு 75 வயதான தம்பதி ஒன்று வந்தனர். கொண்டா காவல் நிலையத்தின் எஸ்பி சந்தோஷ் அவர்களின் ஆலோசனைப்படி இருவருக்கும் சமாதானம் செய்துவைக்கப்பட்டது. மனிதநேயத்தின் அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வயதான தம்பதியை சமாதானப்படுத்தி ஒன்றுசேர்த்த காவல்துறை அதிகாரிகளை மக்கள் பாராட்டிவருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
दादा-दादी का झगड़ा हुआ और थाने तक पहुँच गया, अब समझौता देखिए।❤️😅
खूबसूरत वीडिओ💕#Love #Respect pic.twitter.com/VyV9wSH9Vg
— SACHIN KAUSHIK (@upcopsachin) April 13, 2022

மற்ற செய்திகள்
