'சென்னை' வடபழனி 'விஜயா' மருத்துவமனை “ஊழியர்களுக்கு கொரோனா!”.. 'நிர்வாகம்' எடுத்துள்ள 'அதிரடி' முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரானா பாதிப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1842 பேருக்கு மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான விஜயா மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியானது.
இதனால் விஜயா மருத்துவமனையின் அவசரகால சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை மருத்துவமனையின் அனைத்து செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், விஜயா மருத்துவமனையின் கிளை மருத்துவமனை மற்றும் விஜயா ஹெல்த் மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனை முழுவதுமாக கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.

மற்ற செய்திகள்
