75 லட்சம் கோடி 'வருமானம்'... 11 நாடுகள்ல '36 லட்சம்' பேரை வேலை வாங்குறது... 58 'இந்தியர்'கள் தானாம்!
முகப்பு > செய்திகள் > கதைகள்உலகம் முழுவதும் 36 லட்சம் ஊழியர்களுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த 58 பேர் தலைமை அதிகாரிகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.
![58 Indian Origin CEO Employ Over 36 Lakh Persons Globally 58 Indian Origin CEO Employ Over 36 Lakh Persons Globally](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/inspiring/58-indian-origin-ceo-employ-over-36-lakh-persons-globally.jpg)
இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் இந்தியர்களின் அறிவும், புத்திசாலித்தனமும் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களை விட அதிகமாக உள்ளது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் தங்களது திறமையால் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பை வகித்து வருகின்றனர். இதுகுறித்து சமீபத்திய ஆய்வொன்றில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினை சேர்ந்த 58 பேர் 36 லட்சம் பேரை வேலை வாங்குவது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் பணியாற்றுகின்றனர்.இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர் மற்றும் அமெரிக்கா, எத்தியோப்பியா, இங்கிலாந்து, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினரும் அடங்குவர். இவர்கள் தலைமையில் அந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 75 லட்சம் கோடியை வருமானமாக ஈட்டி வருகின்றன.
அதோடு சுமார் 36 லட்சம் ஊழியர்கள் இவர்களின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர இந்நிறுவனங்கள் ஆண்டுக்கு 23% வருவாயை பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றனவாம். மதிப்புமிக்க இந்த பட்டியலில் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா, வெர்டெக்ஸ் பார்மா நிறுவனத்தின் ரேஷ்மா கேவல்ரமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)