'சீனாவின் குட்டி படை வீரர்கள்'... 'போர்முனை ரோபோவை சோதனை செய்த சீனா'... கிளம்பியுள்ள பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபோர்முனை ரோபோவை சீனா மீண்டும் சோதனை செய்துள்ளது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதத் தாக்குதல் மற்றும் போர்களில் ஏற்படும் ராணுவத்தினரின் உயிரிழப்பைத் தடுக்க போர்முனை ரோபோகளை பயன்படுத்தச் சீனா முடிவு செய்துள்ளது. முழுவதும் ரிமோட் மூலம் இயங்கும் இந்த வகை ரோபோக்கள் அதிநவீன வசதிகள் கொண்டவை. மணிக்கு 10 கிலோ மீட்டர் வரை வேகமாகச் செல்வதோடு, இரவிலும் துல்லியமாகத் தனது இலக்கை தாக்கும்.
இயந்திரத் துப்பாக்கி மற்றும் இரவில் துல்லியமாக எதிரிகளைக் கண்காணிக்க நைட் விஷன் கேமரா என பல தொழில்நுட்ப வசதிகள் இதில் உள்ளது. செங்குத்தாக ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில், கேமராவும் அடக்கம். ரோபா வாரியர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபாபோ மூலம் எந்த காலச்சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் சண்டையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியா, சீனா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில், போர்முனை ரோபோவை சீனா சோதனை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
