'நாங்களும் பலத்தைக் காட்டுவோம்'...'எங்களுக்கு அமைதி தான் முக்கியம்'... ஆனா நாட்டு மக்களுக்குப் பிரதமர் சொன்ன உறுதி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று 21 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை தொடங்குவதற்கு முன்பு லடாக் எல்லையில் வீரமரணடைந்த வீரர்களுக்குப் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய பிரதமர், ''இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக எந்த நாடாவது அத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்போம் எனவும், அதற்கான பலம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். தங்களது உரிமைகளில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட பிரதமர், நேரம் வரும்போது தங்கள் சக்தி மற்றும் வலிமையைக் காட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டு மக்களிடம், எல்லையில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது என உறுதி தெரிவித்துள்ளார். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
