'இத' தாண்டி 'கொரோனா' எப்படி வருதுன்னு...' 'ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...' 'கார்ல இருந்து மீட்டிங் வரைக்கும்...' - அரசு அதிகாரியின் தற்காப்பு ப்ளான்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் தலைதூக்க ஆரம்பித்ததில் இருத்ததில் இருந்து எந்தப்பக்கம் பார்த்தாலும் கொரோனாவின் விழிப்புணர்வு பிரசாரமாக இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவிய போது பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கையும், விழிப்புணர்வுகள் பல நடத்தியும், கொரோனாவின் அச்சம் காரணமாகவும் மக்கள் உஷாராக இருந்தனர்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் குறித்தான அச்சம் மக்களிடம் குறைந்துள்ளதால் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வெகு தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உயர் அதிகாரியான தலைமை ஆணையர் ஒருவர் தன்னை கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்வதற்காக கையில் கொத்தாக வேப்பிலையினை வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியினை மூடியபடி கலந்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த அதிகாரி மாஸ்க் போட்டிருந்தாலும், கூடுதல் பாதுகாப்பிற்காக வேப்பிலை கொத்தை வைத்திருப்பதாகவும், யாராவது அவரிடம் பேசவந்தாலும் சரி, இவர் பேசினாலும் சரி முகத்தில் வேப்பிலையினை வைத்து கொண்டே கேட்டு கொண்டு பேசியதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், கூட்ட அரங்கம் என பல இடங்களில் வேப்பிலை தோரணமாக கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது